கல் வீச்சால் சி.ஆர்.பி.எஃப் வாகனம் விபத்து: 19 வீரர்கள் காயம்

Last Modified : 27 May, 2018 08:47 pm


ஸ்ரீநகரில் இன்று ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில், 19 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் காயமடைந்தனர். 

பெமினா பகுதியில் துணை ராணுவப்படைக்கு சொந்தமான வாகனம் சென்றுகொண்டிருந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனம் முற்றிலும் தலை கீழாக கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் 19 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் காயமடைந்தனர். அதில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வாகனத்தின் மீது சிலர் கற்களை வீசியதால், இந்த விபத்து ஏற்பட்டதாக ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஓட்டுநர் வாகனத்தை கற்களை வீசிய அந்த நபர்கள் மீது ஏற்றிவிடக் கூடாது என்பதற்காக திடீரென திருப்பினார். அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டது" என  சி.ஆர்.பி.எஃப் ஐ.ஜி ரவிதீப் சாஹி தெரிவித்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close