தெருநாய்களுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை!

  Newstm Desk   | Last Modified : 28 May, 2018 12:02 am


உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனை ஜெனரல் வார்டில் நோயாளிகளுடன் தெருநாய்களும் இருக்கும் அதிர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையின் ஜெனரல் வார்டில் நோயாளிகளுடன் தெரு நாய்கள் கட்டிலுக்கு கீழே படுத்திருக்கிறது. நாய்கள் இருக்கும்போதே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து நோயாளிகள் சார்பில் அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் நீங்களே நாய்களைத் துரத்தி விடுங்கள் என நோயாளிகளுடன் அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் அப்பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close