பிரதமர் மோடியை சந்திக்கிறார் குமாரசாமி

  Newstm Desk   | Last Modified : 28 May, 2018 02:32 am


கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பிரதமர் மோடியை நாளை சந்திக்கவுள்ளார்.

பல போரட்டங்களுக்கு பிறகு கர்நாடக அரியணையில் அமர்ந்த மஜத தலைவர் குமாரசாமி,  கர்நாடகா அரசியலில் இலாகாக்களை பகிர்ந்து கொள்வதில் காங்கிரசுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்பிரச்னையால் அரசு கவிழாது; இதை கவுரவ பிரச்னையாக எடுத்து கொள்ளப்போவதில்லை என தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு பெங்களூருவிலிருந்து விமானத்தில் பிரதமர் மோடியை காண புறப்படுகிறார் குமாரசாமி. மாலை 5.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இதையடுத்து நிதித்துறையை கூடுதலாக கவனித்து வரும் நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலைச் சந்திக்கிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு டெல்லியிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு திரும்புகிறார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close