• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ கார் விபத்தில் பலி

  Newstm Desk   | Last Modified : 28 May, 2018 09:21 am

கர்நாடகாவில் நடந்த கார் விபத்தில் சிக்கி அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சித்துநைமா கவுடா பரிதாபமாக பலியானார்.

கர்நாடக மாநிலம் ஜாம்கண்டி தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர் சித்துநைமா கவுடா. 

இவர் கோவாவிலிருந்து பாகல்கோட்டிற்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது இவர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது. 

இதில் படுகாயம் அடைந்த கவுடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மரணமடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மரணமடைந்த எம்.எல்.ஏ. சித்துநைமா கவுடாவின் இறுதிச் சடங்குகள் இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜாம்கண்டி தொகுதியில் சித்துநைமா கவுடா பாஜகவின் ஸ்ரீகாந்த்குல்கர்ணியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். சித்துநைமா கவுடா 49,245 வாக்குகளும் குல்கர்ணி 46,450 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

Advertisement:
[X] Close