பா.ஜ.க நண்பர்கள் ரொம்ப வேலை செய்யாதீர்கள், நான் சீக்கிரம் திரும்பி வந்து விடுவேன் - ராகுல் காந்தி

  கனிமொழி   | Last Modified : 28 May, 2018 02:09 pm


இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி, ஆளுங்கட்சியான பா.ஜ.கா-வையும் பிரதமர் மோடியையும் ட்விட்டரில் கேள்வி கேட்பதையும் சவால் விடுவதையும் தீவிரமாக செய்து வருகிறார். சமீபத்தில் கூட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், மோடிக்கு 'ஃபிட்னெஸ் சவால்' விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட, மோடியும் விரைவில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அப்லோட் செய்கிறேன் என ரீ ட்வீட்டி இருந்தார். பெட்ரோல் விலை அதிகரித்திருக்கும் இந்த நிலையில் மோடியின் அந்த பதிலை காரணம் காட்டி, 'ஃப்யூல் சேலஞ்சை' முன்னெடுக்கும்மாறு ராகுல் காந்தி கூறினார். 

மோடி பிரதமராக பதவியேற்று 4 வருடம் கழிந்திருக்கும் நிலையில், பாஜக சார்பில் அரசின் சாதனைகளை முன்னிறுத்தி பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில், மோடி அரசின் 'ரிப்போர்ட் கார்ட்' வெளியிட்டார்.

இதற்கிடையில் ராகுலின் சமீபத்திய ட்வீட் என்ன தெரியுமா? "சோனியா ஜி-யின் வருடாந்திர உடல் நல பரிசோதனைக்காக சில நாட்கள் இந்தியாவில் இருக்க மாட்டேன். பா.ஜ.கா சமூக வலைதள ட்ரோல் ஆர்மியில் இருக்கும் என் நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, ரொம்ப வேலை செய்யாதீர்கள், நான் சீக்கிரம் திரும்பி வந்து விடுவேன்" என தான் வெளிநாட்டிற்குப் பயணப் படுவதை தெரிவித்துள்ளார்.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close