கேப் ஓட்டுநர் போன் நம்பர் கேட்டு மிரட்டியதால் காரிலிருந்து குதித்த இளம் பெண்

Last Modified : 28 May, 2018 02:05 pm

கால் டாக்ஸியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் செல்போன் நம்பரை கேட்டு மிரட்டியதால் காரில் இருந்து இளம் பெண் குதித்துள்ளார்.

புது டெல்லி மண்டி அவுசில் இருந்து கபஷேரா பகுதிக்கு 19 வயது பெண் நேற்று இரவு 9.45 மணியளவில் கேப்பில் சென்றுள்ளார். டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த அந்த பெண்ணிடம் கேப் டிரைவர் பேசிக்கொண்டே அவரின் செல்போன் நம்பரை கேட்டுள்ளார். அந்த பெண் மறுக்கவே, "நண்பர்களாக பழகலாம் நம்பரை கொடு" என்று மிரட்டும் தொனியில் கேட்டுள்ளார். இதனால் அந்த பெண் அச்சமடைந்து தவ்லா கான் பேருந்து நிலையத்திற்கு அருகே கார் சென்று கொண்டு இருந்த போது காரில் இருந்து கிழே குதித்துள்ளார். 

அந்த பகுதியில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டுள்ளனர். அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. கார் டிரைவர் அந்த இடத்தில் நிற்காமல் சென்றுவிட்டார். இந்த பெண் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் கார் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புகார் கொடுத்த பெண் உண்மையான தகவலை தான் தந்துள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close