காங்கிரசுக்கு தான் கடமைப்பட்டு இருக்கிறேன், மக்களுக்கல்ல: குமாரசாமி

  Newstm Desk   | Last Modified : 28 May, 2018 02:57 pm

தான் காங்கிரசுக்கு தான் கடமைப்பட்டு இருப்பதாகவும், கர்நாடக மக்களுக்கு அல்ல என்றும் அம்மாநில முதல்வர் குமாரசாமி கூறியுள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடகத்தில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி பிரதமர் மோடியை குமாரசாமி இன்று டெல்லியில்  சந்தித்து பேசவுள்ளார். அதே சமயம் விவசாய கடனை குமாரசாமி தள்ளுபடி செய்யாததை கண்டித்து பெங்களூரு தவிர கர்நாடகத்தில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, "கர்நாடக சட்டப்பேரவையில் தனது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியால் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. என்னுடைய அரசு சுதந்திரமான அரசு அல்ல. எந்த திட்டமாக இருந்தாலும் தனது கூட்டணி கட்சியான காங்கிரசுடன் கலந்தாலோசித்து செயல்படுத்த வேண்டிய சூழலில் நான் இருக்கிறேன்.

ம.ஜ.தவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வது குறித்து, எனது கூட்டணி கட்சியுடன்  விவாதிக்க வேண்டும் . அதற்கு எனக்கு ஒரு வாரக்காலம் தேவைப்படுகிறது. விவசாயிகளை தற்கொலை செய்ய தூண்டும் வகையில் பேசுவதை எடியூரப்பா தவிர்க்க வேண்டும். நான் காங்கிரசுக்கு தான் கடமைப்பட்டுள்ளேன், விவசாயிகளை தற்கொலை செய்ய தூண்டும் வகையில் பேசுவதை எடியூரப்பா தவிர்க்க வேண்டும்" என்று கூறினார். 

மேலும் விவசாய கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவு எட்டப்படவில்லையெனில் தான் முதல்வர் பதவியிலிருந்து விலகி கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். 

குமாரசாமி இவ்வாறு கூறியுள்ளதற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close