'காந்தி, நேரு இருந்த ஜெயில்ல மல்லையாவால இருக்க முடியாதா?' - மோடி

Last Modified : 28 May, 2018 11:20 pm


பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை பிரதமர் மோடி சந்தித்த போது, இந்திய சிறைகள் குறித்து விஜய் மல்லையா வழக்கில் எழுப்பப்பட்ட கேள்விகள் சரியல்ல என கூறியதாக சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 

கிங்பிஷர் நிறுவன தலைவர் விஜய் மல்லையா 9000 கோடி ரூபாய் வங்கிக்கடன் வாங்கிவிட்டு பிரிட்டன் தப்பினார். அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது, பிரிட்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், இந்திய சிறைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், அங்கு விஜய் மல்லையாவை அனுப்பக்கூடாது என்றும் கூறியிருந்தார். இது குறித்து பிரிட்டன் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் இந்தியாவில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. 

"கடந்த மாதம் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் சந்திப்பிற்கு பிரதமர் மோடி சென்றபோது, பிரதமர் மே-விடம், பிரிட்டன் நாட்டின் நீதிமன்றங்கள் இந்திய சிறைகளின் நிலைமை குறித்து கேள்வி எழுப்புவது சரியல்ல. காந்தி, நேரு போன்றவர்களை நீங்கள் அடைத்து வைத்த சிறை தான் அவை என்று கூறினார்" என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close