பதஞ்சலி புதிய சிம் கார்டு அறிமுகம்!!

  Sujatha   | Last Modified : 29 May, 2018 07:43 am

  

யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம்  பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து புதிய சிம்கார்டு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஜியோ வருகைக்கு பின் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நஷ்டத்தால் இயங்கி வரும் நிலையில், பதஞ்சலி நிறுவனம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் இணைந்து புதிய சிம்கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. சுதேசி சம்ரித்தி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த சிம்கார்டில்  ரூ.144க்கு ரீசார்ஜ் செய்தால் அளவில்லா அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ், 2ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும். மேலும் இந்த சிம் கார்டு வாங்கும் அனைவர்க்கும் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடும் உண்டு. இதனுடன்  'சுதேசி சம்ரித்தி' சிம் கார்டு வைத்திருக்கும் நபர், பதஞ்சலி பொருட்கள் வாங்கும் போது 10% சலுகை விலையில் கிடைக்கும். 

தற்போது இந்த சிம் கார்டு பதஞ்சலி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் இந்த சிம் கார்டு கிடைக்க ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close