3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 29 May, 2018 09:02 am

பிரதமர் மோடி இந்தோனிசியா, சிங்கப்பூர், மலேசியாவுற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

மோடி இன்று இந்தோனேசியா புறப்பட்டு செல்கிறார். இந்த பயணத்தின் போது இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுடனான இந்தியாவின் உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தோனேசியாவில் இன்று முதல் 3 நாட்கள் முக்கிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளிடம் உரையாற்றுகிறார்.

31-ம் தேதி இரவு மலேசியா செல்லும் பிரதமர் மோடி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மலேசிய பிரதமர் மஹதீர் முகமதுவை சந்தித்து பேசுகிறார். அங்கிருந்து ஜூன் 1-ம் தேதி சிங்கப்பூர் செல்லும் அவர்,  2-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இதனை தொடர்ந்து சிங்கப்பூரில் மகாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள, மகாத்மா காந்தியின் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்துகிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close