ஆர்.எஸ்.எஸ் விழாவில் பிரனாப் முகர்ஜி - காங்கிரஸ் அதிர்ச்சி!

  Padmapriya   | Last Modified : 29 May, 2018 11:45 am

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ள ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பயிற்சி நிறைவு வழியனுப்பு விழாவில் முன்னாள் குடியரசுத தலைவரும் காங்கிரசாருமான பிரனாப் முகர்ஜி பங்கேற்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை அலுவலகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரின் ரேஷிம்பாக் பகுதியில் அமைந்துள்ளது. இந்த தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு சங் ஷிக்‌ஷா வர்க்-துருட்டிய வர்ஷ் எனப்படும் 25 நாள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த முகாமில் நாடு முழுவதிலும் இருந்து இங்கு வந்துள்ள 708 தொண்டர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

பயிற்சிகள் முடிந்து இந்த முகாமில் இருந்து செல்பவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி வழியனுப்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த விழாவில் பங்கேற்குமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜிக்கு அழைப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவரும் வருகை தர சம்மதித்துள்ளதாகவும் ஆர்.எஸ்.எஸ் உயர்மட்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

தீவிர காங்கிரஸ்காரராக இருந்ததால்தான் பிரனாப் முகர்ஜிக்கு ஜனாதிபதி பதவியை சோனியா காந்தி வழங்கினார். ஜனாதிபதி பதவி ஏற்பவர்கள் எந்த ஒரு கட்சியையும் சார்ந்தவராக இருக்கக் கூடாது என்பதால், கட்சிப் பொறுப்புக்கள் அனைத்தில் இருந்தும் ராஜினாமா செய்தார் பிரனாப். இப்போது, பதவிக்காலம் முடிந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் விழாவுக்கு பிரனாப் அழைக்கப்பட்டதும், அவர் அதற்கு வர சம்மதம் தெரிவித்ததும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close