குமாரசாமி காங்கிரசின் ஏடிஎம் மேனேஜர்: பா.ஜ.க விமர்சனம்

  Newstm Desk   | Last Modified : 29 May, 2018 02:36 pm

குமாரசாமி காங்கிரசின் ஏடிஎம் மேனேஜராக கர்நாடகாவில் செயல்படுகிறார் என்று பா.ஜ.க விமர்சித்துள்ளது. 

கார்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று  விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து பேசியபோது, "எந்த முடிவையும் காங்கிரசுடன் இணைந்துபேசி தான் எடுக்க முடியும். ஒரு வார காலம் தேவை. நான் காங்கிரசுக்கு தான் கடமைப்பட்டு இருக்கிறேன் மக்களுக்கு அல்ல" என்று கூறினார். 

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் குமாரசாமியின் இந்த பேச்சுக்கு பா.ஜ.கவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பா.ஜ.கவின் சம்பித் பத்ரா பேசும்போது, "இதைவிட மோசமான ஒன்று இருக்குமா? இது ஜனநாயகத்திற்கு எதிரான ஒன்று. காங்கிரசை பொறுத்தவரை கர்நாடக அதனுடைய ஏடிஎம். அதற்கு குமாரசாமி என்ற மேனேஜர் தற்போது கிடைத்துள்ளார். இனி கர்நாடக அரசு ஜன்பத்தில் இருந்து வரும் உத்தரவு படி இயங்கும். மக்கள் தங்களின் முதல்வர் யார் என்று கேட்கிறார்கள்" என பேசினார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close