சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

  Newstm Desk   | Last Modified : 29 May, 2018 02:41 pm


சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

மத்திய இடைநிலை கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 26ம் தேதி வெளியானது. இதில், நாடு முழுவதும் 83.01% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். 

தொடர்ந்து சிபிஎஸ்இ 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 16.38 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். தமிழகத்தில் இருந்து 20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதி இருக்கின்றனர். இந்நிலையில், சிபிஎஸ்இ அறிவிப்பின்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. மாணவர்கள் http://www.cbse.nic.in, http://www.cbseresults.nic.in  என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

தேர்ச்சி விபரங்களின் அடிப்படையில், நாடு முழுவதும் 86.70% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 88.67% பேர் மாணவிகள், 85.32% பேர் மாணவர்கள் ஆவர். இந்தியாவில் முதலிடத்தை திருவனந்தபுரம் பிடித்துள்ளது. இங்கு 99.60% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 97.37% தேர்ச்சி பெற்று சென்னை இரண்டாமிடத்திலும், 91.86% தேர்ச்சி பெற்று அஜ்மீர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. 4 மாணவர்கள் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர். 


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close