உ.பி, பீகார், ஜார்கண்ட்டில் இடி, மின்னல் தாக்கி 40 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 29 May, 2018 03:37 pm


உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இடி, மின்னல் தாக்கியதில் 40 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். 

உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இடி, மின்னல் தாக்கியதில் 10 பேர் இறந்துள்ளனர், மேலும் 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதேபோன்று ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது.  இதனால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. பல்வேறு பகுதிகளில் இடி தாக்கியதில் 13 பேர் மரணமடைந்தனர்.  பீகாரில் பெய்த கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 

இதையடுத்து மேற்கண்ட மாநிலங்களில் மழை பெய்யும் சமயங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இன்றும், நாளையும் மணிக்கு 50 முதல் 70 கிமீ வரை காற்று வீசக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close