மும்பை ரயில் நிலையத்தில் இருந்த ரயிலில் திடீர் தீ விபத்து!

  Newstm Desk   | Last Modified : 29 May, 2018 04:27 pm


மும்பை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் விரைவு ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது திடீரென அந்த ரயிலின் சில பெட்டிகளில் தீ பிடித்தது. தீ பரவ ஆரம்பித்ததை அறிந்த அங்குள்ள ரயில்வே ஊழியர்கள், தீயணைப்புப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் தான் என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
[X] Close