வாட்டி வதைக்கும் வெயிலால் குழம்பிப்போன வாக்கு இயந்திரங்கள்!

  Newstm Desk   | Last Modified : 29 May, 2018 07:09 pm


கடுமையான வெயிலால் வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரங்கள் செயல் இழந்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் 4 மக்களவை மற்றும் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல்களில் எதிர்கட்சிகள் ஒன்றுகூடி வேட்பாளர்களை நிறுத்தி பாஜகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துகின்றன.

மகாராஷ்டிராவில் பண்டாரா- கோண்டியா தொகுதியில் நேற்று தேர்தல் நடைபெற்றது. பாஜக எம்பியாக இருந்த நானா படோல் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு பதிலாக பாஜக சார்பில் ஹேமந்த் படோல் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் கடந்த முறை பாஜகவிடம் தோல்வியடைந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல். இவர் பலமுறை அங்கு வெற்றி பெற்றவர். இந்த முறை அவருக்கு பதில் மதுகர் போட்டியிடுகிறார். அவருக்கு சிவசேனா உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் பல வாக்கு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என புகார் எழுந்தன. இதனால் பல இடங்களில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கடுமையான கோடை வெப்பம் நிலவி வருவதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இதுபோன்ற பிரச்சினை எழுந்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றனர். 

அண்மையில் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டபேரவை தேர்தலின்போது பெங்களூரு, ஹூப்பள்ளி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வாக்குபதிவு இயந்திரங்கள் கோளாறு அடைந்ததால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்திருக்கலாம் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடதக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close