ரூ.15 லட்சம் டெபாஸிட் செய்யப்படும் என்று சொல்லவே இல்லை: சாதிக்கிறார் பாஜக எம்.பி

  Padmapriya   | Last Modified : 30 May, 2018 12:15 am

மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக பிரதமர் மோடி ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை என்று பாஜக எம்.பி. அமர் சாப்லே தெரிவித்துள்ளார்.

மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பிரதமர் மோடி அரசின் சாதனைகளை பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மக்களிடம் எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதன்படி புனே அருகே பிம்ப்ரி நகரில் பாஜக மாநிலங்களவை எம்.பி. அமர் சாப்லே மோடி அரசின் சாதனைகள் குறித்து மக்களிடம் பேசினார்.

அப்போது அவர், ''பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் முன் கறுப்புப் பணத்தை மீட்டால் மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று ஒருபோதும் கூறவில்லை. பிரதமர் மோடி பேசியது தவறாக எதிர்க்கட்சிகளால் அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற தவறான தகவல்களை மக்களிடையே கூறி எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் இருந்து மீட்பேன் என்று மட்டுமே பிரதமர் மோடி கூறியிருந்தார். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று நாங்கள் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும் போது, பிரதமர் மோடி வாக்குறுதி அளித்ததாக எப்படிக் கூற முடியும்'' என அமர் சாப்லே பேசினார். 

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் பொது பேசிய மோடி, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் இருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வருவேன், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த வார்த்தையை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close