சிபிஎஸ்இ 1, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்

  Newstm Desk   | Last Modified : 29 May, 2018 07:22 pm


சிபிஎஸ்இ 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்ற விதிமுறைகளை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

என்.சி.இ.ஆர்.டி(NCERT) விதிமுறைகளின் படி, சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு மொழிப்பாடம், கணிதம் ஆகிய இரண்டை மட்டுமே கற்பிக்க வேண்டும். 3ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம், கணிதத்துடன் சூழ்நிலை அறிவியல் பாடத்தை சேர்த்து கற்பிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் சில தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் பின்பற்றுவதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்ததாவது, "விதிமுறைகளை பள்ளிகள் அனைத்தும் பின்பற்றுகிறதா? என சிபிஎஸ்இ வாரியம் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். இது தொடர்பாக சிபிஎஸ்இ, மத்திய அரசு, என்.சி.இ.ஆர்.டி பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டார். 

மேலும் அவர், சிபிஎஸ்இ பள்ளிகள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அரசு தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இவற்றை பின்பற்றுவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close