அரசின் நடவடிக்கையால் ஒரே இரவில் லட்சாதிபதியான விவசாயிகள்!!

  Newstm Desk   | Last Modified : 30 May, 2018 01:09 am

மஹாராஷ்ட்ராவில் அரசு கொடுத்த இழப்பீட்டுத் தொகையால் ஒரே இரவில் விவசாயிகளின் வங்கி கணக்கில் லட்சங்கள் குவிந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் துல்ஜாபூர் – நாக்பூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக 13 கிராமங்களில் இருந்த சுமார் 5,44,517 ஹெக்டர் விவசாய நிலங்களை அம்மாநிலஅரசு கையகப்படுத்தியுள்ளது. இந்த நிலத்திற்கு இழப்பீடுதரும் விதமாக அரசு அளித்த இழப்பீடு தொகையால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒரே நாளில் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர். விவசாயிகளில் நிலத்திற்கு இழப்பீடாக அவற்றின் உரிமையாளர்களான விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 79,157,590 இதுவரை வழங்கியுள்ளது. 


இதையடுத்து சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒரே இரவில் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர். ஆனால் மாரத்வாடாவில் உள்ள ஹட்கோன் கிராமத்தில் மட்டும் பல விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை அரசு வழங்கவில்லை என்ன விவசாயிகள் பலர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பெற்று சாலை அமைக்கும் மத்திய அரசை கண்டித்து நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளங்களில் விமர்சித்துவருகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close