கர்நாடக அரசில் தொடரும் அமைச்சரவை இழுபறி!

Last Modified : 29 May, 2018 09:47 pm


கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் இடையேயான அமைச்சரவை பங்கீட்டு சந்திப்பில் சுமூகமான தீர்வு ஏற்படாததால், அமைச்சரவை நியமனத்தில் இழுபறி நீடித்து வருகிறது. 

கர்நாடக சட்டமன்ற தேர்தலில், தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதா ஆட்சியமைப்பதை தடுக்க, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வைத்தன. மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே அமைச்சரவை ஒதுக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் ஒப்புதலுக்கு வரவில்லை. 

இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இல்லத்தில் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, முதல்வர் குமாரசாமி, நிதித்துறையை தனது கட்சி உறுப்பினருக்கு கேட்டதாக தெரிகிறது. வழக்கமாக கூட்டணியில் இரண்டாவது கட்சிக்கு நிதித்துறை வழங்கப்படும் என குமாரசாமி கூறினாராம். ஆனால், காங்கிரஸ் தரப்பில் இருந்து அதை மறுத்துவிட்டார்களாம். இதைத் தொடர்ந்து, வரும் நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நிதித்துறை தவிர, பொதுத்துறை, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட துறைகளை பற்றியும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close