• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

'6 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுக்கும் மூத்த அதிகாரி': ஏர் இந்தியா பணிப்பெண்

Last Modified : 30 May, 2018 01:23 am


ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தனக்கு 6 வருடங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பகீர் குற்றச்சாட்டை சமூக வலைதளத்தில் வைத்துள்ளார். 

விமானத்துறை அமைச்சருக்கு அந்த பணிப்பெண் எழுதிய புகார் கடிதத்தில், அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி 6 வருடங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறியுள்ளார். அவரை மறுத்ததால் தனக்கு பல இடைஞ்சல்களை கொடுத்து வருவதாகவும், ஒரு கட்டத்தில் இதுகுறித்து பல புகார்களை எழுப்பியதாகவும் தெரிவித்துளளார்.

ஆனால், ஏர் இந்தியா அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். "இதுகுறித்து நிறுவன அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மூத்த பெண் அதிகாரி ஒருவர், 'அப்படி அவர் என்ன செய்துவிட்டார். என்னிடமும் இதுபோல பல முறை பேசியுள்ளார்', என்று சர்வ சாதாரணமாக கூறுகிறார்" என அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

யாருமே நடவடிக்கை எடுக்காததால் வேறு வழியில்லாமல் அமைச்சரை அணுகியுள்ளதாகவும், நேரில் சந்தித்து அந்த அதிகாரியின் பெயரை தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஏர் இந்தியாவுக்கு விமானத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். நடவடிக்கை எடுக்காவிடில், புதிய கமிட்டியை தானே அமைத்து விசாரணை நடத்துவதாகவும் எச்சரித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close