கேரளாவில் கலப்பு திருமணம்: கொடூரமாக கொல்லப்பட்ட வாலிபர்

  Sujatha   | Last Modified : 04 Jun, 2018 12:33 pm

கேரளாவில், கலப்பு காதல் திருமணம் செய்த வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் சூரியகவளா பகுதியை சேர்ந்தவர் கெவின் பி.ஜோசப் (வயது 23). தலித் கிறிஸ்தவர். இவரும் அதே பகுதியை சேர்ந்தவ நினு (20) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்தனர். 

இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை, நீனு குடும்பத்தினர் ஏற்பாடு செய்த ஆட்களால் கெவின் ஜோசப் கடத்திச் செல்லப்பட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நினுவின் அண்ணன் மற்றும் அவனது கூட்டாளிகள் கெவினை படுகொலை செய்து, அவரின் இரு கண்களையும் தோண்டி, அவரது உடலை குட்டையில் வீசிச்சென்றனர். இதையடுத்து, கெவின் ஜோசப், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆற்றில் நேற்றுமுன்தினம் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். கெவினின் உடலை கைப்பற்றிய போலீஸார், இந்த கொலை தொடர்பாக, நீனுவின் தந்தை சாக்கோ ஜான் (50), அண்ணன் சயானு சாக்கோ (26) உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். சாக்கோ ஜானும், சயானு சாக்கோவும் நேற்று கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். 

இதற்கிடையே, இந்த கவுரவ கொலை, கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையை கண்டித்து, காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தலித் அமைப்புகள் அழைப்பின்பேரில், கோட்டயம் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close