ராகுல் காந்தியும், நிபா வைரசும் ஒன்னு தான்: ஹரியானா அமைச்சர் சர்ச்சை ட்விட்

  Newstm Desk   | Last Modified : 30 May, 2018 08:44 am

உயிர்கொல்லி நிபா வைரசுக்கும் ராகுல் காந்திக்கும் வித்தியாசமில்லை என்று ஹரியானா மாநில சுகாதார துறை அமைச்சர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ஹரியானா மாநிலத்தின் சுகாதார துறை அமைச்சர் அனில் விஜ். அந்த மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சி செய்கிறது. எப்போதும் தனது கருத்துக்களால் சர்ச்சையில் சிக்கி கொள்பவர். தாஜ்மகால் ஒரு அழகான கல்லறை என அனில் விஜ் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பற்றி ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “ராகுல்காந்திக்கும் நிபா வைரஸுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. ராகுல்காந்தி எந்த அரசியல் கட்சியுடன் தொடர்பு வைத்துக்கொண்டாலும், அது உடனடியாக அழிந்துபோய்விடும்” என பதிவிட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் 14 பேரின் உயிரைக் குடித்த மர்மக் காய்ச்சல்  ‘நிபா வைரஸ்’ எனும் உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. கேரளாவைத் தொடர்ந்து நாடு முழுவதும் `நிபா வைரஸ்’   அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வருகிறது. இந்நிலையில்,  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இந்த கொடிய நோயுடன் ஒப்பிட்டிருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close