டெல்லியில் பயங்கர தீ விபத்து: பாம்பி ஆப்ரேஷன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது

  Newstm Desk   | Last Modified : 30 May, 2018 11:55 am

பாம்பி ஆப்ரேஷன் மூலம் டெல்லி தீ விபத்தை கட்டுப்படுத்தியது இந்திய பாதுகாப்பு படை.

டெல்லி மால்வியா பகுதியில் உள்ள ரப்பர் குடோனிற்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டு இருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து அந்த தீ குடோனுக்குள்ளும் பரவியது. 

அந்த பகுதியில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் பெரிய அளவில் ஆபத்து ஏற்பட்டு விடாமல் இருக்க அந்த பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் 30 வண்டிகளில் சென்றனர். ஆனால் அந்த வண்டிகள் அந்த பகுதியில் உள்ள சாலைக்குள் செல்வதில்லை சிக்கல் ஏற்பட்டது. அதற்குள் தீ அருகில் உள்ள காலியான குடியிருப்புகளுக்குள் பரவியது. 

இதனையடுத்து இந்திய பாதுகாப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு அவர்கள் புதுவித உக்தியை பயன்படுத்தி உள்ளனர். 

இன்று காலை வரை தீ அணையாமல் இருந்ததை அடுத்து பாதுகாப்பு படையினர் இந்த பணியில் ஈடுபட்டனர். விமான படையின் எம்ஐ 17 ஹெலிகாப்டரை பயன்படுத்தினர். அதில் பெரிய கயிற்றை பயன்படுத்தி யமுனா நீர் சேமிப்பில் இருந்து நீரை பெரிய கண்ட்டைனரில் எடுத்து அதனை தீவிபத்து ஏற்பட்ட இடத்தில் ஊற்றினர். 

மூன்று முறை இது போன்று தண்ணீர் ஊற்றப்பட்டது. நகர்புரத்தில் நடந்த தீவிபத்துக்கு முதல் முறையாக இந்த முறையை இந்திய பாதுகாப்பை படை செய்துள்ளது. இதில் மொத்தமாக 8 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு 'பாம்பி ஆப்ரேஷன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close