போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிக்க இந்தியா - பாகிஸ்தான் முடிவு!

  Newstm Desk   | Last Modified : 30 May, 2018 06:54 pm
pakistan-india-agree-to-restore-loc-ceasefire-agreement

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக கடைபிடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

கடந்த 2003 நவம்பர் மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. எனினும், இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோட்டைத் தாண்டி இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவ தரப்பும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. ஆனால் இதில் அப்பாவி பொதுமக்களும் பலியாவது வாடிக்கையாகி விட்டது. 

சமீபத்தில் முஸ்லிம்களின் பண்டிகையான ரம்ஜானையொட்டி, எல்லையில் தாக்குதல் நடத்த வேண்டாம் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி கூறியிருந்தார். இருந்தும் அதனை பாகிஸ்தான் கண்டுகொள்ளாமல் தாக்குதல் நடத்தியது. பின்னர் இந்திய ராணுவத்தின் பதிலடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இரு நாட்டு ராணுவ செயல்பாட்டின் இயக்குநர் ஜெனரல்கள் மத்தியில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஹாட்லைன் தொலைபேசி மூலம் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இருநாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தக்கொள்கைகளை முழுவதுமாக கடைபிடிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக வரும் காலங்களில் எல்லைத்தாக்குதல் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close