• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

ரோட்டோமேக் நிறுவனத்தின் ரூ.177 கோடி சொத்துகள் முடக்கம்!

  Padmapriya   | Last Modified : 31 May, 2018 10:08 am

ed-attaches-rs-177-cr-assets-in-rotomac-bank-fraud-case

ரோட்டோமேக் குழுமத்துக்கு சொந்தமான 177 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

பேங்க் ஆப் பரோடா வங்கியில் 3,695 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக அந்த வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் ரோட்டோமேக் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

ரோட்டோமேக் குழுமத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி, மனைவி சாதனா கோத்தாரி, மகன் ராகுல் கோத்தாரி மற்றும் வங்கி அதிகாரிகள் சிலரும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கடந்த பிப்ரவரி மாதம் வங்கி மோசடி தொடர்பாக ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு சொந்தமாக உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள சொத்துக்களை, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. மேலும், ரோட்டோமேக் குழுமத்துக்கு சொந்தமான 177 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

ரோட்டோமேக் நிறுவனம் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் வர்த்தகம் செய்ததாகவும், வெளிநாட்டில் இருந்து பெற்ற தொகையில் கமிஷன் வாங்கி மோசடி செய்ததாகவும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 

Advertisement:
[X] Close