டெல்லி அமைச்சர் வீட்டில் சிபிஐ ரெய்டு!

  Newstm News Desk   | Last Modified : 31 May, 2018 07:27 am

delhi-minister-satyendra-jain-s-house-raided-by-cbi

தலைநகர் புதுடெல்லியின் சுகாதாரம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ரெய்டு நடத்தினர். பொதுத்துறை பணிகளில் விதிகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

2015-16ம் ஆண்டின் போது, டெல்லி பொதுத்துறை அமைச்சகத்தின் பணிகளுக்காக, ஒரு ஆலோசனை குழுவை உருவாக்கியதாகவும், அதில் 24 கட்டிடக்கலை நிபுணர்களை நியமனம் செய்ததில் ஊழல் நடந்ததாகவும் சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. சோனி புலனாய்வு நிறுவனம் மற்றும் அலைய்ட் சர்வீசஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் மூலம் இந்த நிபுணர்கள் சேர்க்கப்பட்டதாகவும், அந்த நிறுவனங்கள் புதிதாக துவக்கப்பட்டதாகவும்குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அந்த நிபுணர்களை பயன்படுத்தி, சாலைகள், பள்ளிகள் உட்பட பல்வேறு அரசு திட்டங்களை டெண்டர் விடுவதில் முறைகேடு செய்ததாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. 

அமைச்சர் வீடு உட்பட இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பொதுத்துறை அதிகாரிகளின் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது . டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஏற்கனவே சிபிஐ மூலமாக பிரதமர் தனது கட்சியினரை தொடர்ந்து பழிவாங்குவதாக குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து, "பிரதமர் மோடிக்கு என்ன தான் வேணும்?" என ட்விட்டரில் எழுதினார். டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, மத்திய ஆணையமான நிட்டி ஆயோக்கின் ஆதரவுடன் தான் இந்த குழுவை உருவாக்கியதாக தெரிவித்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close