இடைத்தேர்தல் முடிவுகள்: 4 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி!

  முத்துமாரி   | Last Modified : 31 May, 2018 05:30 pm

by-election-results-rld-ahead-of-bjp-in-kairana

இன்று 4 மக்களவை தொகுதிகள் மற்றும் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. 

உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா- கோண்டியா மற்றும் நாகாலாந்து ஆகிய 4 மக்களவை தொகுதிகளுக்கும், நூர்பூர்(உத்தரபிரதேசம்), ஜோகிஹட்(பீகார்), தாராலி(உத்தரகாண்ட்), கோமியா அண்டி சில்லி(ஜார்கண்ட்), மகேஷ்தலா(மேற்கு வங்காளம்), அம்பதி(மேகாலயா), பால்ஸ் கடேகான் (மகாராஷ்டிரா), ஷாகோட் (பஞ்சாப்), செங்கண்ணூர் (கேரளா) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதனுடன், போலி வாக்காளர் அட்டை விவகாரத்தால் தள்ளிவைக்கப்பட்ட கர்நாடக மாநிலம்  ஆர்.ஆர்.நகர் தொகுதி தேர்தலும் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது.

மக்களவைத் தொகுதிகள்:

கைரானா(உ.பி): ராஷ்டிரிய லோக் தளம் (ஆர்.எல்.டி) கட்சியைச் சேர்ந்த டபாசம் ஹசன் பா.ஜ.க வேட்பாளர் மிரிகங்காவை விட 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி!

பால்கர்(மகாராஷ்டிரா): பா.ஜ.க வேட்பாளர் கவிட் ராஜேந்திர தேத்யா 29,572 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பண்டாரா- கோண்டியா (மகாராஷ்டிரா): 20,583 வாக்குகள் வித்தியாசத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மதுகர் குக்டே யஷ்வந்த்ரோ வெற்றி பெற்றார். 

நாகாலாந்து: நாகலாந்து தொகுதியில் பா.ஜ.க கூட்டணியுடன் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி வெற்றி

சட்டப்பேரவை தொகுதிகள்: 

நூர்பூர்(உத்தரபிரதேசம்):  சமாஜ்வாதி கட்சியின் நயிம் உய் ஹசன், பா.ஜ.கவின் அவ்னி சிங்கை 6,211 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இதனால் உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 

ஜோகிஹட் (பீகார்): ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் ஷாநவாஸ் 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி

தாராலி(உத்தரகாண்ட்): பா.ஜ.க வேட்பாளர் முன்னி தேவி ஷா 1811 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கோமியா & சில்லி(ஜார்கண்ட்): கோமியா மற்றும் சில்லி ஆகிய இரு தொகுதிகளிலும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றுள்ளது. 

மகேஷ்தலா(மேற்கு வங்காளம்): திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் துலால் சந்திர தாஸ் வெற்றி

அம்பதி(மேகாலயா): காங்கிரஸின் மியானி டி ஷிரா, தேசிய மக்கள் கட்சியின் சி ஜி மொமினை விட 3,191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மியானி மேகாலயாவின் முன்னாள் முதல்வர் முகுல் சங்மாவின் மகள் ஆவார்.

பால்ஸ் கடேகான்(மகாராஷ்டிரா): காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வஜித் வெற்றி

ஷாகோட்(பஞ்சாப்): காங்கிரஸின் ஹாதேவ் சிங் லாதி வெற்றி. இவர் அகாலி தளம் கட்சியின் நாப் சிங் கோஹரை விட 38,801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

செங்கண்ணூர்(கேரளா): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷாஜி செரியன் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

ஆர்.ஆர்.நகர்(கர்நாடகா): காங்கிரஸின் முனிரத்னா 41,162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.