இடைத்தேர்தல்: 3 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி!

  முத்துமாரி   | Last Modified : 31 May, 2018 01:35 pm

congress-wins-in-3-state-assembly-seats

இன்று 4 மக்களவை தொகுதிகள் மற்றும் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. 

உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா- கோண்டியா மற்றும் நாகாலாந்து ஆகிய 4 மக்களவை தொகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மே 28ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நாடாளுமன்றத்தேர்தல் வருவதையொட்டி இந்த தேர்தல் முடிவுகள் நாடு முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றியை தக்க வைத்துள்ளது. மேகாலயாவின் அம்பதி தொகுதியில்: காங்கிரஸ் வேட்பாளர் மியானி டி ஷிரா, தேசிய மக்கள் கட்சியின் சி ஜி மொமினை விட 3,191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மியானி மேகாலயாவின் முன்னாள் முதல்வர் முகுல் சங்மாவின் மகள் ஆவார்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்ஸ் கடேகான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வஜித் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கர்நாடகாவின் ஆர்.ஆர்.நகர் தொகுதியில்  காங்கிரஸின் முனிரத்னா 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், பஞ்சாப் ஷா கோட் தொகுதியிலும் காங்கிரஸ் முன்னிற்கு பெற்று வருகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close