மோடியின் சூப்பர் வெற்றி; 7.7% ஜிடிபி உயர்வு!

  Newstm News Desk   | Last Modified : 31 May, 2018 06:19 pm

india-s-fourth-quarter-gdp-rises-to-7-7

500,1000 ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு முதன்முறையாக நாட்டின் ஜிடிபி 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2017-18ம் நிதியாண்டில் கடைசி காலாண்டின் உள்நாட்டு உற்பத்தியின் விவரங்களை மத்திய அரசு இன்று வெளியிட்டது. அதில், இந்திய உள்நாட்டு உற்பத்தி (GDP) விகிதம் 7.7% என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் 6.8% வளர்ச்சியை வீழ்த்தி, மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. 

2016ம் ஆண்டின் இறுதியில் பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, இந்திய உள்நாட்டு உற்பத்தி சறுக்கலை கண்டது. ஆனால், அப்போது முதல், பொருளாதார நிபுணர்களின் கணிப்பை மிஞ்சி ஒவ்வொரு காலாண்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்திய பொருளாதாரம். கடந்த காலாண்டில் 7.2% வளர்ச்சி கணக்கிடப்பட்ட நிலையில், இந்த காலாண்டில் 7.7 சதவீதமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2017-18ன் மொத்த ஜிடிபி 6.7% என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து, இந்திய பொருளாதாரம் சில வருடங்களுக்கு சரிவை சந்திக்கும் என எதிர்க்கட்சிகள் எச்சரித்த நிலையில், பழைய நிலைக்கு வளர்ச்சி திரும்புவது மோடி எக்கனாமிக்ஸுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close