ஏர் இந்தியாவை வாங்க யாருமில்லை: முழிக்கும் மத்திய அரசு

  Newstm News Desk   | Last Modified : 01 Jun, 2018 02:41 am

no-bids-for-air-india-as-deadline-ends

கடும் நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு முயற்சி செய்து வந்த நிலையில், கெடு முடிந்தும் அதை வாங்க யாரும் முன்வரவில்லை.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் உள்ளது. அதனால்,  ஏர் இந்தியாவின் பெரும்பாலான பங்குகளை தனியார் நிறுவனத்திடம் விற்க மத்திய அரசு முயற்சி செய்து வந்தது. இதற்காக கொடுக்கப்பட்ட கெடு முடிந்தும் யாரும் வாங்க முன்வராததால், அது நீட்டிக்கப்பட்டது. இன்று மாலை 5 மணியோடு நீட்டிக்கப்பட்ட கெடுவும் முடிந்தது. இதுவரை யாருமே நிறுவனத்தை வாங்க ஆர்வம் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட மத்திய விமானத்துறை, "ஏர் இந்தியாவை வாங்க எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை என தகவல் கிடைத்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்" என ட்விட்டரில் கூறியது. முதலில் கொடுக்கப்பட்ட கெடு மே 1ம் தேதியோடு முடிந்த நிலையில், அது 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close