தேர்தல் ஆணையமா, இல்லை ஊழல் ஆணையமா?: சிவ சேனா பாய்ச்சல்

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2018 06:02 am
election-commission-is-totally-corrupt-uddhav-thackeray

இந்தியாவில் தேர்தல் நடத்தப்படும் விதம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், அதற்கு ஊழல் மிகுந்த தேர்தல் ஆணையம் தான் காரணம் என்றும், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார். 

நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாக சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார். மின்னணு வாக்கு இயந்திரங்களில் பெருமளவு மோசடி நடப்பதாகவும் அவர் கூறினார். மேலும், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் சிவ சேனா தனித்து போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"பல்கரில் நடந்த தேர்தல் வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கையும் மிகப்பெரிய மோசடி. தேர்தல் முடிந்த பிறகு ஒரே இரவில் எப்படி 1 லட்சம் பேர் வாக்களித்ததாக அதிகரிக்க முடியும்? இதற்கான ஆதாரங்கள் எங்களுக்கு வேண்டும்" என்றார். சிவ சேனா வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் வங்கா 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். "கடைசி கட்ட வாக்கு எண்ணிக்கையில் திடீரென பல ஆயிரம் வாக்குகள் சிவ சேனா வேட்பாளருக்கு குறைந்தது. இது எப்படி நடந்தது. மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரியுள்ளோம். ஆனால், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை" என்றார்.

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close