'நாரதர்' மகாபாரத காலத்தின் கூகுள்: உத்திர பிரதேச அமைச்சர்

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2018 10:26 am

narada-muni-is-like-google-of-mahabharata-era-u-p-minister

மகாபாரத காலத்திலேயே கூகுள் போல நாரதர் செயல்பட்டார் என்று உத்தர பிரதேச அமைச்சர் தினேஷ் சர்மா கூறியுள்ளார். 

சமீப காலமாக பா.ஜ.க அமைச்சர்கள் நவீன தொழில்நுட்பங்கள் எல்லாம் பண்டைய காலத்தில் இருந்தே உள்ளது என்ற கருத்தினை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க அமைச்சர் தினேஷ் சர்மா ஒரு கருத்தை தெரிவித்தார். 
உத்திர பிரதேசத்தில் நடந்த இந்தி பத்திரிகையாளர்கள் தின நிகழ்ச்சியில் அவர்  கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது, "ஊடகத்துறை மகாபாரத காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது. அஸ்தினாபுரத்தில் அமர்ந்தபடி, போரின்போது பறவையின் பார்வையின் வழியே போர் நடப்பதை சஞ்சயா விவரித்த நிகழ்வை எடுத்துரைத்து, அப்போது இருந்தே ஊடகத்துறை துவங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், நேரலை இல்லாமல் எவ்வாறு விளக்க முடியும்?.
உங்களின் கூகுள் இப்போது  தான் வந்துள்ளது. ஆனால் எங்களின் கூகுள் எப்போதோ வந்துவிட்டது. நாரத முனி தகவல்களை தருவதில் முன்னோடி. அவரால் எங்கும் எப்போதும் செல்ல முடியும். மேலும் நாராயணா.. என்பதை 3 முறை கூறி எந்த செய்தியையும் எங்கிருந்து வேண்டுமானும் சொல்ல முடியும்" என்றார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close