கர்நாடகாவில் காலா படத்திற்கு தடைக்குறித்து பரிசீலிக்கப்படும்: குமாரசாமி

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2018 12:55 pm
will-discuss-about-banning-kaala-in-karnataka-h-d-kumarasamy

காலா படத்தை கர்நாடகாவில் தடை செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநிலத்திற்கு எதிராக ரஜினி கருத்து தெரிவித்தார் என்று கூறி கர்நாடகாவில் காலா படம் வெளியாக தடை  கர்நாடக ஃபிலிம் சேம்பர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதற்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். 
இதனையடுத்து இதுகுறித்து பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேசும் போது,"காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடுவது குறித்து அம்மாரில ஃபிலிம் சேம்பரிடம் பேச்சுவார்தை நடத்தப்படும்" என்றார். 
இந்நிலையில் இன்று கர்நாடக ஃபிலிம் சேம்பர் சார்பில் அம்மாநில முதல்வருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில் காலா படத்தை கர்நாடகாவில் வெளியட தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "காலா படத்திற்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close