காவிரி ஆணையம்: இன்று மாலை அரசிதழில் வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2018 01:01 pm
cauvery-management-authority-announcement-will-be-published-today-in-gazette-of-india

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக இன்று மாலை அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் தகவல் வெளியிட்டுள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாக மத்திய அரசு இதுகுறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, தற்போது பருவமழை தொடங்கியும், மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவெடுத்தது. வரும் வாரத்தில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தகவல் வெளியானது. 

இந்நிலையில் இன்று மாலைக்குள் அரசிதழில் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என  நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் தகவல் தெரிவித்துள்ளார். இன்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் பட்சத்தில் தமிழக அரசு தனது நடவடிக்கையில் இருந்து பின்வாங்கலாம் என பேசப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close