விமான உதிரிப்பாகம் வாங்கியதில் ஊழல்? - தெரியாது என்கிறார் ராஜ்நாத் சிங்

  Padmapriya   | Last Modified : 01 Jun, 2018 10:01 pm
an-32-scam-india-denies-rs-17-55-crore-bribery-allegations-by-ukraine-over-aircraft-deal

இந்திய விமானப்படையில் உள்ள ஏ.என் 32 ரக விமானங்களுக்கான  உதிரி பாகங்களை வாங்க உக்ரைன் நிறுவனதுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டிய விவகாரம் அம்பலமாகியுள்ளது.

பாதுகாப்புத் துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதனை ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் போக்குவரத்து பிரிவில் பயன்படுத்தக்கூடிய ஏ.என்-32 ரக விமானங்களுக்கு உதிரி பாகங்கள் வாங்குவது தொடர்பாக இந்திய பாதுகாப்பு துறைக்கும், உக்ரைன் நாட்டை சேர்ந்த குளோபல் மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்துக்கும் இடையே 2014-ம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் நடந்து 11 மாதங்களுக்கு பிறகு இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்புக்கு தெரியவந்தது. இதில் இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுமார் ரூ.17.55 கோடி லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தொடர்பு, பணம் பரிமாற்றம் நடந்ததாக சந்தேகப்படும் துபாயில் செயல்படும் நூர் இஸ்லாமிக் வங்கி ஆகியவற்றிடம் விசாரணை நடத்த உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு முடிவு செய்தது. இந்த விவகாரத்தில் தங்களுக்கு உதவும்படி இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு, உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு கடிதம் எழுதி ஏற்கெனவே கடிதம் எழுதியிருப்பது தற்போது செய்திகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. 

கடிதம் வரவில்லை:

ஆனால், உள்துறை அமைச்சகம் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. போபால் நகருக்கு வந்திருந்த உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கிடம் இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்ட போது, "அதுபோன்ற கடிதம் ஏதும் உக்ரைன் அரசிடம் இருந்து எங்களுக்கு வரவில்லை.  அந்த விவகாரம் குறித்து எனக்குத் தெரியாது" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close