சல்மான் கானை தாக்கினால் ரூ.2 லட்சம்: ஹிந்து அமைப்பின் தலைவர் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2018 10:08 pm
vph-associated-leader-announced-offers-rs-2-lakh-reward-for-thrashing-salman-khan

சல்மான் கானை பொது வெளியில் தாக்கினால் ரூ. 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என 'ஹிந்து ஹை ஆகே' என்ற அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
சல்மான் கான் தயாரித்து நடித்திருக்கும் படம் 'லவ்ராத்ரி'. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு 'நவராத்ரி'யை கொச்சைப்படுத்துவது போல உள்ளதாக ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் சல்மான் இதனை வேண்டுமென்றே செய்தாகவும், ஹிந்துக்களின் மனம் புண்படும் படி எந்த காரியமும் நடக்க விடமாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்து இருந்தனர். 
இந்நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத்துக்கு தொடர்புடைய 'ஹிந்து ஹை ஆகே' என்ற அமைப்பின் ஆக்ரா கிளை தலைவர் கோவிந்த் பரஷர் சல்மானுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சல்மான் கானை பொதுவெளியில் தாக்கினால் ரூ. 2 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருப்பது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

தொடர்ந்து வட மாநிலங்களில் திரைப்படங்களுக்கு எதிராக அமைப்புகள் குரல் கொடுப்பது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதே போன்று பத்மாவத் படத்தில் நடித்த தீபிகா படுகோனேவின் மூக்கை அறுத்தால் பரிசு கொடுக்கப்படும் என்று ஒரு அமைப்பினர் அறிவித்திருந்தது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close