கறுப்புப்பணம், பினாமி சொத்து பற்றி தகவல் தந்தால் ரூ.5 கோடி வரை பரிசு!

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2018 03:23 pm
person-can-get-reward-upto-5-crore-for-giving-specific-information-about-benami-properties-and-black-money

நாட்டில் கருப்புப்பணம், பினாமி சொத்துக்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.5 கோடி வரை பரிசு வழங்கப்படும் என வருமானவரித்துறைத் தகவல் தெரிவித்துள்ளது.

நாட்டில் கருப்பு பணம் ஒழிப்பு மற்றும் வருமான வரி ஏய்ப்பை தடுக்க மத்திய அரசு ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பினாமி சொத்து பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. ஒரு கோடி பரிசு எனவும், கருப்புப்பணம் மற்றும் பினாமி சொத்துக்கள் ஆகிய இரண்டும் குறித்து தகவல் கொடுத்தால் ரூ. 5 கோடி வரை பரிசளிக்கப்படும். தகவல்  தெரிவிப்பவர்களின் விபரங்கள் அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கப்படும்.  வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் இது தொடர்பான தகவல்களை கொடுக்கலாம். தகவல் உறுதி செய்யப்படும் பட்சத்தில் தகவல் தெரிவிப்பவருக்கு வழங்கப்படும் சன்மானம் 4 மாதத்திற்குள்ளாக வழங்கப்படும் என்பன போன்ற தகவல்கள் இந்த திட்டத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளன. முழுமையான  விபரங்களுக்கு https://www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close