திருட்டு பயம்! தண்ணீர் கேன்களுக்கு பூட்டுபோட்ட கிராம மக்கள்

  ஐஸ்வர்யா   | Last Modified : 01 Jun, 2018 06:43 pm
lock-water-drums-in-rajasthan-village-to-avoid-robbery

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரசராம்பூரா என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தண்ணீர் டிரம்களுக்கு பூட்டுபோட்டுள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பர்சராம்பூரா கிராமத்துக்கு ஒரு வார இடைவெளியில் டேங்கர் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கு என அடிப்படை வசதிகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காத அவலம் நிலவி வருகிறது. தண்ணீர் கிடைக்கப்பெறாதவர்கள் இரவு நேரத்தில் திருடிச் செல்வதால் பரசராம்பூரா கிராம மக்கள் தண்ணீர் டிரம்கள், கேன்களுக்கு பூட்டு போட்டுள்ளனர். இரவு நேரத்தில் தண்ணீர் திருடப்படுவதால் டிரம்முக்கு அருகிலேயே ஒருவர் காவல் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கத்தை விட தண்ணீரை பத்திரமாக பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பரசராம்புரா கிராம மக்கள் தெரிவித்தனர். இதுவரை இந்தக் கிராமத்தில் மட்டும் தண்ணீர் திருட்டு தொடர்பாக போலீஸில் 3 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பர்சராம்பூரா கிராமத்து பெண் ஒருவர் கூறுகையில், “தண்ணீரை தங்கம் போல பாதுகாத்துக்கொள்ளுங்கள் திருட்டு போய்விட்டால் எங்களை கேட்கக்கூடாது என பஞ்சாயத்து நிர்வாகம் பொது மக்களிடம் தெரிவித்துள்ளது. அதனால் வீட்டின் உள்ளேயும், விட்டிற்கு பின்புறத்திலும் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் கேன்களுக்கு பூட்டுபோட்டு பாதுகாத்து வருகிறோம். தண்ணீர் தட்டுப்பாடே மக்களை திருட்டு வேலைகளில் ஈடுபட வைக்கிறது” என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close