சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்: 3 மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை!

  Newstm News Desk   | Last Modified : 01 Jun, 2018 07:52 pm

3-students-suicide-after-10th-cbse-results

சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானதில், தங்களது தேர்வு மதிப்பெண்களால் வேதனைக்குள்ளான 3 மாணவர்கள் தற்கொலை செய்துள்ள சம்பவம் டெல்லி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நாடு முழுவதும் 16 லட்சம் 10ம் வகுப்பு மாணவர்கள் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த 29ம் தேதி வெளியான நிலையில், 14 லட்சம் மாணவர்கள் அதில் தேர்ச்சி பெற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஒருபுறம் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வந்தாலும், தோல்வியடைந்த சில மாணவர்கள் எடுத்துக்கொண்ட விபரீத முடிவுகள் தான் இன்று நம் கண் முன் நிற்கின்றன. 

டெல்லியை சேர்ந்த இரண்டு மாணவிகளும் ஒரு மாணவனும், தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறாததால், தற்கொலை செய்துள்ளனர். வசந்த் குஞ் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி தேர்வில் 70% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், 11ம் வகுப்பில் தனக்கு அறிவியல் பிரிவு கிடைக்காதோ என்ற அச்சத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதேபோல, த்வாரகா பகுதியை சேர்ந்த 15 வயது மாணவன், 59% மதிப்பெண்கள் பெற்றதால், வீட்டிலேயே தூக்கிட்டுள்ளார். தாப்ரி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி, அறிவியல் மற்றும் கணக்கில் தேர்ச்சி பெறாத சோகத்தில், தனது கையை அறுத்துக்கொண்டு, பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 

10ம் வகுப்பு தேர்வில் தோற்றால் வாழ்விலேயே தோற்றது போல வீட்டில் கொடுக்கப்படும் நெருக்கடி தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close