ஐ.என்.எக்ஸ் ஊழல் வழக்கு: ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்

  Newstm News Desk   | Last Modified : 01 Jun, 2018 10:40 pm

cbi-summons-p-chidambaram-to-be-questioned

ஐ.என்.எக்ஸ் மீடியா உரிம ஊழல் தொடர்பாக,  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்குகளில் ப.சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முயன்று வரும் நிலையில், அவர் டெல்லி நீதிமன்றங்களில் முன்ஜாமீன் கோரி மனுக்கள் தொடுத்திருந்தார். அதில் ஒரு மனுவில் ஜூன் 3ம் தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், ஜூன் 5ம் தேதி வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரை, அவரை கைது செய்யக்கூடாது என மற்றொரு நீதிமன்றம்  என கூறியிருந்தது.

இந்நிலையில், ஜூன் 6ம் தேதி அவரை விசாரிக்க வேண்டுமென சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

305கோடி ரூபாய் மதிப்புள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் இந்தியாவில் இயங்க அனுமதியளித்ததில் அப்போதைய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி 10 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close