• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல்: மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டம்!

  Newstm News Desk   | Last Modified : 01 Jun, 2018 11:03 pm

terrorists-enter-jammu-kashmir-large-scale-attacks-planned

காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், தலைநகர் ஸ்ரீநகரில் பெரிய தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருப்பதாகவும் பாதுகாப்பு படையினர் எச்சரித்துள்ளனர். 

இந்திய பாதுகாப்புப் படையினரிடம் இருந்து வரும் தகவலின் படி, சில தீவிரவாதிகள் எல்லைக்குள் ஊடுருவியிருப்பதாகவும், அடுத்த 2-3 நாட்களில் மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். காஷ்மீர் மட்டுமல்லாமல், புதுடெல்லி வரை பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. 

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் வீட்டில் கையெறி குண்டு வீசப்பட்டுள்ளதாம். வீட்டுக்கு அருகே விழுந்ததால், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தெரிகிறது. ஆனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசாரை நோக்கி நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில்களில் 3 பேர் காயமடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது. 

17ம் தேதி ரம்ஜான் தினத்தை முன்னிட்டும், இஸ்லாமியர்களின் முக்கிய தினமான படர் போரின் நினைவு நாளை முன்னிட்டும் காஷ்மீரில் பெரிய தாக்குதல்கள் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
[X] Close