ஆப்பிள் வாட்ச்சால் உயிர் காப்பாற்ற பெற்ற இந்திய பெண் வழக்கறிஞர்!

  சுஜாதா   | Last Modified : 02 Jun, 2018 08:18 am

the-apple-watch-saved-life-of-an-indian-woman

ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் புனேவில் பெண் வழக்கறிஞர் ஒருவரின் உயிரை காப்பாற்றி உதவியுள்ளது. 

புனேவை சேர்ந்தவர் ஆர்த்தி ஜொஜெல்கர் (53) முப்பது ஆண்டுகளாக வழக்கறிஞர் தொழிலை செய்து வருகிறார். ஐபோன் 8 பிளஸ் போனை பயன்படுத்தும் இவர், சமீபத்தில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வாங்கியுள்ளார். அந்த வாட்ச்சின் மூலம் தனது உடல்நிலை, இதயத்துடிப்பு ஆகியவற்றை கண்காணித்து வந்துள்ளார். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு அவரது ஆப்பிள் வாட்ச் அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளது. அதாவது ஆர்த்தியின் இதய துடிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக துடிப்பதாக காட்டியிருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த ஆர்த்தி  மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது இதயம் நிமிடத்திற்கு 140 முறை துடித்துள்ளது. உடனடி மருத்துவ உதவியால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டார். இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்திற்கு அந்த பெண் நன்றி தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவன சிஏஓ டிம் கூக்கிற்கு, நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே ஆப்பிள் வாட்ச் மூலம் சிலர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close