விமான உதிரிப்பாக ஊழல்: உக்ரைன் குற்றச்சாட்டுக்கு பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் 

  Padmapriya   | Last Modified : 02 Jun, 2018 10:44 am
nirmala-sitharaman-denies-scam-in-an-32-aircraft-deal-with-ukraine

உக்ரைன் நாட்டிடம் இருந்து, இந்திய விமான படைக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை, பாதுகாப்பு அமைச்சகமும் மறுத்துள்ளது. 

ஐரோப்பிய நாடான உக்ரைனிடமிருந்து, இந்திய விமான படையின் ஏ.என்-32 ரக விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில், ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உக்ரைன் விசாரணை அமைப்பு இந்திய அரசிடம் கோரிக்கைவிடுத்தது. ஆனால், அது பற்றி எதுவும் தெரியாது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்தார். 

இதனிடையே, 'இந்த விவகாரம் தொடர்பாக, இந்திய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும்' என, காங்கிராஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து, பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் கூறும்போது, "உக்ரைன் அரசு, அந்த நாட்டு அதிகாரிகள் மீது மட்டுமே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த ஒத்துழைப்பு அளிக்கும்படி, அந்நாட்டு அரசு, நம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதில், நம் அதிகாரிகளுக்கு எந்த தொடர்பும் கிடையாது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த, குளோபல் மார்க்கெட்டிங்  நிறுவனத்திடம் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை.  அவர்களுடன் எந்த பேச்சும் நடத்தப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close