'டெஸ்ட் டியூப் பேபி'க்கு சிறந்த எடுத்துக்காட்டு சீதை தான்: உ.பி துணை முதல்வர் 

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2018 04:10 pm
sita-was-a-test-tube-baby-says-up-deputy-cm

'டெஸ்ட் டியூப் பேபி'க்கு சிறந்த எடுத்துக்காட்டு சீதை தான் என உ.பி துணை முதல்வர் தினேஷ் ஷர்மா தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பண்டைய காலத்திலே நவீன தொழில்நுட்பங்கள் இருந்தன என சமீபகாலமாக பா.ஜ.கவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துக்களும் மக்கள் மத்தியில் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சர்ச்சையில் உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் குமார் இதில் சிக்கியுள்ளார். முன்னதாக அவர், மகாபாரத காலத்திலேயே கூகுள் வந்துவிட்டது. நாரதர் தான் மகாபாரத காலத்தின் கூகுள் என்று கூறினார். தொடர்ந்து நேற்று மற்றொரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, "இந்தியாவில் 'டெஸ்ட் டியூப் பேபி' என்பது முந்தைய காலத்திலே வந்துவிட்டது. கடவுள் ராமனின் மனைவியான சீதா தேவி ஒரு குடுவையில் இருந்து தான் கண்டெடுக்கப்பட்டார். எனவே சோதனைக்குழாய் குழந்தை என்பது அந்த காலத்திலே இருந்து வந்துள்ளது உறுதியாகிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டும் சீதா தேவி தான்" என்றார். அவரது இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ,மேலும், இவரின் பேச்சு மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close