காலா படத்திற்கு எதிராக பெங்களுருவில் போராட்டம்!

  Newstm Desk   | Last Modified : 02 Jun, 2018 03:58 pm

protest-against-to-release-kaala-movie-in-bangalore

கர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியாவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என பெங்களூரில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. முன்னதாக  காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி பேசியதால் தற்போது கர்நாடகாவில் 'காலா' படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகாவில் காலா படம் திரையிடப்படாது என வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார். கன்னட திரைப்பட வர்த்தக சபையும் இதனை ஆமோதித்தது. மேலும், கர்நாடக முதல்வர் குமாரசாமி, "கர்நாடகாவில் காலா படம் வெளியாவதை கன்னடர்கள் விரும்பவில்லை" என தெரிவித்தார்.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கர்நாடக முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்தார். பின்னர் குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடுவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும்" என்றார். இதையடுத்து பெங்களுருவில் கன்னட ரக்‌ஷின வேதிகே அமைப்பினர் காலா படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே இதுதொடர்பாக கூட்டம் கூட்டி காலா படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றினர். 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close