தண்ணீர் பஞ்சத்தால் சிம்லாவில் பள்ளிகளுக்கு விடுமுறை

  Newstm News Desk   | Last Modified : 03 Jun, 2018 04:16 pm

government-schools-in-shimla-to-shutdown-for-5-days-due-to-water-crisis

சிம்லாவில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் அரசு பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 
இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தளமாக சிம்லா உள்ளது. இங்கு கடந்த ஒரு மாதமாக கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்து.
இதனால் சுமார் 1,70,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தண்ணீர் பற்றாக்குறையை பயன்படுத்தி பல தனியார் நிறுவனங்கள் ஏராளமான விலைக்கு பாட்டீல் குடிநீரை விற்பனை செய்து வருவதாக சிம்லா மக்கள், புகார் தெரிவித்தனர். 
இது சுற்றுலா சீசன் சுற்றுலாப் பயணிகள் ஊருக்குள் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காலிக் குடங்களுடன் மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். 
இந்த நிலையில், இமாச்சலபிரதேச உயர்நீதிமன்றம் இவ்விவகாரத்தை தானாக முன்வந்து எடுத்து அரசுக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. கட்டுமானப்பணிகள் மற்றும் வாகனங்களை கழுவுவதற்கு தண்ணீர் விநியோகிக்ககூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் எந்த ஒரு தனி நபருக்கும் தண்ணீர் டேங்குகள் வழங்கக்கூடாது. இந்த நிலையில், நாளை முதல் 5 நாட்களுக்குப் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close