பெட்ரோல் விலை உயர்வு வருத்தமளிக்கிறது: பா.ஜ.க அமைச்சர்

  Newstm News Desk   | Last Modified : 03 Jun, 2018 05:36 pm

we-are-worried-about-petrol-price-hike-bjp-minister

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை, தங்களுக்கும் வருத்தமளிப்பதாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். 

பெட்ரோல் விலை உயர்வு பொதுமக்களுக்கு மட்டும் வருத்தமளிக்கவில்லை, தங்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் நக்வி தெரிவித்துள்ளார். "நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது, கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்திருந்தது. அப்போது அரசு பெட்ரோல் விலையை உயர்வை ஒவ்வொரு முறை உயர்த்தும் போதும் எதிர்த்தோம். தற்போது இந்த விலை உயர்வு எங்களுக்கும் வருத்தமாக தான் இருக்கிறது. ஆனால், பெட்ரோலியத்துறை அமைச்சர் பெட்ரோல் விலை உயர்வை குறைக்க கடும் முயற்சி எடுத்து வருகிறார்" என்றார் 

Advertisement:
[X] Close