மேகாலயா கலவரம்; இணைய சேவைகள் துண்டிப்பு

  Newstm Desk   | Last Modified : 03 Jun, 2018 08:57 pm
meghalaya-riots-internet-services-suspended

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில், க்ஹாசி மற்றும் பஞ்சாபி மக்களிடையே எழுந்த பிரச்னை கலவரமாக மாறியதை தொடர்ந்து, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஷில்லாங்கில் ஒரு பேருந்தில் பயணம் செய்த க்ஹாசி இளைஞருக்கும் பஞ்சாபி பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது சண்டையாக மாற, க்ஹாசி அமைப்பு ஒன்று காவல்துறையினரிடம், அப்பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அங்கிருந்து விரட்டப்பட்ட வேண்டும் என புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. 

ஒரு கடைக்கு தீ வைக்கப்பட்டது. பல இடங்களில் வன்முறை கும்பல்கள் கல் எரிந்து தாக்குதல்கள் நடத்தின. கலவரங்களில் 10 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து கலவரம் மற்ற பகுதிகளுக்கு பரவி விடக் கூடாது என்பதற்காக இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. கலவரம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இரண்டாவது ஆளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close