14 நிமிடங்களுக்கு 'மாயமான' சுஷ்மா ஸ்வராஜின் விமானம்!

  shriram   | Last Modified : 04 Jun, 2018 02:53 pm
sushma-swaraj-s-plane-out-of-contact-for-14-minutes

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் செய்த விமானம், 14 நிமிடங்களுக்கு விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து மாயமானதால், பதற்றம் ஏற்பட்டது. 

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மொரிஷியஸ் சென்றார். அவா சென்ற விமானம், இந்திய சிவில் விமானத்துறை கட்டுப்பாட்டில் இருந்து மொரீஷியஸ் கட்டுப்பாடு அறையுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலையில், தொடர்பு ஏற்படவில்லையாம். மதியம் 2.08 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து கிளம்பிய விமானம், 4.44 மணிக்கு மாலே கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டுள்ளது. அதன்பின், மொரீஷியஸ் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ள முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், தொடர்பு ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து, விமானத்தை பற்றிய விவரங்கள் தெரியாதபோது எழுப்பப்படும் INCERFA என்ற குறியீட்டை மொரீஷியஸ் விமான கட்டுப்பாட்டு அறை பதிவு செய்துள்ளது. ஆனால், சுமார் 14 நிமிடங்களுக்குப் பின், 4.58 மணியளவில் சுஷ்மா சுவராஜ் இருந்த விமானம் மொரீஷியஸ் கட்டுப்பட்டு அறையை தொடர்பு கொண்டுள்ளது. பின்னர் விமானம் பத்திரமாக தரை இறங்கியது. 

வழக்கமாக 30 நிமிடங்களுக்கு பிறகு INCERFA எழுப்பப்படும் நிலையில், விமானத்தில் அமைச்சர் இருந்தது தெரிய வந்ததால், உடனடியாக எழுப்பப்பட்டதாம். விமானத்தின் தகவல் துண்டிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமானங்கள் பயணிக்கும்போது, குறிப்பிட்ட அந்த பகுதியில் அவ்வப்போது சிக்னல் துண்டிப்பு ஏற்படுவது வாடிக்கையான ஒன்று என்றும் கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close